வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (11:06 IST)

நடிகை காவியா மாதவனுக்கு வளைகாப்பு...

திலீப்பை இரண்டாவது திருமணம் செய்த நடிகை காவியா மாதவனுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்துள்ளது.

 
தமிழில் காசி, என்மன வானில், சாதுமிரண்டா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
 
காவ்யா மாதவனுக்கும், நிஷால் சந்திரா என்பவருக்கும் திருமணம் நடந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் மலையாள நடிகர் திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் காதல் ஏற்பட்டது. 
 
திலீப் தனது முதல் மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டு காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்தார். இதனிடையே நடிகர் திலீப், பிரபல நடிகையை கடத்தி பாலியல் சித்ரவதை செய்த வழக்கில் சிக்கி சிறை சென்றார். இந்த வழக்கில் இப்போது திலீப் ஜாமீனில் இருக்கிறார். காவ்யா மாதவன் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. சமீபத்தில் அவர் கர்ப்பம் அடைந்து இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கேரளாவில் உள்ள அவரது வீட்டில் நடந்தது. காவ்யா மாதவன் மஞ்சள் கவுன் அணிந்து இருந்தார். நெருங்கிய உறவினர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
முதல் மனைவி மஞ்சுவாரியருக்கு பிறந்த திலீப்பின் மகள் மீனாட்சியும் இதில் பங்கேற்றார்.