ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (18:12 IST)

இன்னா மயிலு: கவினின் ‘லிப்ட்’ பட பாடலை வெளியிட்ட அனிருத்!

இன்னா மயிலு: கவினின் ‘லிப்ட்’ பட பாடலை வெளியிட்ட அனிருத்!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடித்த ‘லிப்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இன்று இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட ஒருசிலர் பாடிய இந்த பாடலை இன்று இணையத்தில் ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் வெளியிட்டுள்ளார். இன்னா மயிலு என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிகில் படத்தில் நடிகை அமிர்தா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தை வரப்பிரசாத் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் மே மாத இறுதியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என்பதும், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது