செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (15:59 IST)

கவின், லொஸ்லியாவை அழைத்து விருந்து வைத்த கமல்? - வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அந்நிகழ்ச்சிக்கு பிறகு தங்களது கேரியரில் அதீத கவனத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் சக போட்டியாளர்களை அடிக்கடி சந்தித்து வருகின்றனர். அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 
அந்த வகையில் தற்போது பிக்பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களாக கவின் , லொஸ்லியா, சாண்டி, அபிராமி ஆகியோரை அழைத்து கமல் விருந்து கொடுத்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. அதை உறுதி படுத்தும் வகையில் கமல், கவின், சாண்டி, லாஸ்லியா அபிராமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுவது  போல் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவியது. இதனால் மற்ற போட்டியாளர்களை ஒதுக்கிவிட்டு இவர்களுக்கு மட்டும் தனி கவனிப்பா என்று சோஷியல் மீடியாக்களில் விமர்சனங்களும் எழுந்தது. 
 
ஆனால், பின்னர் தான் தெரிந்து இது எடிட் செய்யப்பட்ட புகைபடமென்று. கமல் யாரையும் அழைத்து விருந்து வைக்க வில்லை மேலும், லொஸ்லியா தற்போது தனது சொந்த ஊரான இலங்கைக்கு சென்றுள்ளார் அந்த புகைப்படமும் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது எனவே, லாஸ்லியா கமலுடன் விருந்தில் பங்கேற்றுள்ள இந்தப் புகைப்படம் முற்றிலும் போலியான புகைப்படம் என்பது உறுதியாகியுள்ளது