புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (12:17 IST)

"சித்தப்பு இஸ் பேக்" - குஷியான ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக வெளியேற்றப்பட்டனர். ஆனால்,  சரவணன் யாருமே எதிர்பார்காத நேரத்தில் திடீரெனெ வெளியேற்றப்பட்டார். இதனால் மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துவிட்டனர். 
பிக்பாஸ் வீட்டிலிருந்த போட்டியார்கள் மற்ற போட்டியாளர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது சரவணனுடன் நெருக்கமாக அண்ணன் தம்பியாக பழகி வந்தவர்கள் சாண்டி மற்றும் கவின் தான். இவர் இருவரும் நேற்று சரவணை சந்தித்து புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். 
 
இந்நிலையில் சாண்டி தனது இன்ஸ்டாகிராமில் "சித்தப்பு இஸ் பேக் ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம். ரொம்ப மிஸ் பண்ணோம் அண்ணா உங்கள நானும், கவினும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட சிதப்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியாகிவிட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Finally Our Chithappuuu is Back