ஐ எம் வெரி சாரி...! முதல் பதிவிலே மன்னிப்பு கேட்ட லொஸ்லியா!

Papiksha| Last Updated: வியாழன், 10 அக்டோபர் 2019 (17:44 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுள் அதிகம் ரசிகர்களை சம்பாதித்து படு ஃபேமஸ் ஆகியுள்ளார் லொஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவருக்கு விஜய் டிவி கொடுத்த வாய்ப்பினால் இன்று புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். 


 
கவினை காதலித்து ஆரம்பத்தில் வெறுப்பை சம்பாதித்து வந்த லோசலியாவுக்கு பின்னர் அதுவே வெற்றி வழியாக அமைந்தது. கவினால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்த லொஸ்லியாவுக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. மேலும் விஜய் டிவில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பக்கத்தில் கவுனுடன் இணைத்து நடைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டு பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய லொஸ்லியா அவரது ரசிகர்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை என நெட்டிசன்ஸ் குறை கூறி வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பிக்பாஸிற்கு பிறகு முதன் முறையாக முதல் பதிவிட்டுள்ள லொஸ்லியா, “முதலில் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்து அளவுகடந்த  அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னை பொறுத்தவரையில் 'நன்றி' என்பது ஒரு சிறிய சொல் என்று நான் நினைக்கிறேன், அது போதுமானதாக இல்லை. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் எனக்கு அளித்த ஆதரவை எண்ணி  நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். மிக்க நன்றி. நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இல்லாததற்கும், கேள்விகளுக்கு பதிலளிக்காததற்கும் மன்னிக்கவும்.  நிச்சயமாக உங்கள் அனைவரையும் நான் சந்தோசப்படுத்துவேன் என சத்தியம் செய்கிறேன். . ஐ லவ் யூ சோ மச்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :