சீக்ரெட் ரூமில் சேரன் இருப்பதை கண்டுபிடித்த வனிதா!

Last Modified புதன், 11 செப்டம்பர் 2019 (08:35 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுள்ளார் என்பது பார்வையாளர்கள் ஆகிய நமக்கு தெரிந்தாலும் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின்போது சேரன் மூன்று போட்டியாளர்களுக்கு மூன்று கேள்விகளை கேட்டு இருப்பதாக பிக்பாஸ் அறிவித்திருந்தார். கவின் , வனிதா மற்றும் லாஸ்லியா ஆகியோர்களுக்கு சேரன் கேட்டிருந்த கேள்விகளுக்கு அவர்கள் தங்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளித்தனர்இந்த நிலையில் கவின் - லாஸ்லியா விவகாரம் குறித்த சேரன் கேள்வி வனிதாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் எப்படி சேரனால் இதுகுறித்து கேள்வி கேட்க முடியும்? அப்படி என்றால் அவர் சீக்ரெட் அறையில் இருக்கின்றாரா என்ற சந்தேகத்தை வனிதா எழுப்பினார். கவின் - லாஸ்லியா காட்சிகள் இன்னும் ஒளிபரப்பாகி இருக்க வாய்ப்பே இல்லை என்பதால் சேரன் வெளியே சென்றிருக்க முடியாது என்றும், பிக்பாஸ் அவரை சீக்ரெட் அறையில் தான் வைத்து இருப்பார் என்றும் கூறிய வனிதா, சேரனை ’அண்ணா எங்கே இருக்கின்றார்கள்’ என்று அழைத்தார். அதனை சேரன் சீக்ரெட் அறையில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்

கவினும் சேரன் சீக்ரெட் ரூமில் தான் இருப்பார் என்பதை சாண்டியிடம் கூறியதை பார்க்கும் போதும் சேரன் சீக்ரெட் அறையில் இருப்பது கிட்டத்தட்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சேரன் சீக்ரெட் அறையில் இருந்து மீண்டும் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு வரும் போது யாருக்கும் ஆச்சரியம் இருக்காது என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் திங்கட்கிழமை சேரன் சீக்ரெட் அறையிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :