1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (12:26 IST)

24 மணி நேரத்துக்குள் இவ்ளோ வியூஸா… ’காத்து வாக்குல’ கலக்கும் டிரைலர்!

நேற்று வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இந்நிலையில் தற்போது மற்ற மொழிகளிலும் ப்ரமோஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் “KRK” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மையக் கதாபாத்திரங்களான ‘காதிஜா, ராம்போ, கண்மணி ஆகிய பெயர்களின் ஆங்கில எழுத்துகளை தலைப்பாக வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சமந்தா மற்றும் நயன்தார இருவரையும் ஒரே நேரத்தில் காதலிக்கும் விஜய் சேதுபதி சந்திக்கும் பிரச்சனைகளை ஜாலியாக சொல்கிறது இந்த டிரைலர். இதையடுத்து படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகமாகியுள்ளது. இந்த டிரைலர் வெளியாகி 24 மணிநேரங்களுக்கு முன்பாகவே 5 மில்லியன் பேரால் இணையத்தில் பார்க்கப்பட்டுள்ளது.