1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 14 ஜனவரி 2019 (10:46 IST)

விஜய் சேதுபதிக்கு ஹார்டின் அம்புவிட்ட கீர்த்தி சுரேஷ் ..!

பொங்கல் விருந்தாக ரஜினியின் தீவிர ரசிகன்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படம்  வெளிவந்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி அடைய வைத்துவிட்டது. 



 
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற மிகப்பெரும் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர். 
 
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என எல்லா தரப்பினரும் ரசிக்கும் விதத்தில் துளியும் ஆபாசமில்லாத நகைச்சுவையால் அவரது குழந்தை முகபாவங்கள், துள்ளலான நடிப்பு போன்றவையால் பலரும் பேட்ட படத்தை ரசித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தை திரையில் பார்த்து ரசித்த நடிகை கீர்த்தி சுரேஷ், படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். 
 
நவாஷுதின் சித்திக்கின் நடிப்பு மாற்றம் பற்றி புகழ்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக வரும் நடிகைகள் சிம்ரன் மற்றும் த்ரிஷாவையும் பாராட்டியுள்ளார். குறிப்பாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை கில்லர் என கூறி ஹார்டின் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.  


 
தமிழ் திரையுலகத்தின்  வரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பை கண்டு  ஆச்சர்யப்படாதவர்கள் எவருமில்லை. இருக்கவும் முடியாது.