செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (16:36 IST)

தெலுங்கு சினிமா ரசிகர்கள் vs தமிழ் சினிமா ரசிகர்கள் ’டுவீட்டரில் மோதல்... ...

உலகத்தில் எந்த மூளையில் என்ன நடந்தாலும் சமூக வலைதளங்களின் வெளிச்சத்தால் அதை உலகம் அறியச் செய்து டிரெண்டிங் ஆகவும் வைரலாகவும் செய்திட  முடியும். இந்நிலையில் இன்றைய தின டுவிட்டர் டிரெண்டிங் ஆக போய்க்கொண்டிருப்பது கோலிவுட், டோலிவுட் ஆகிய இரு மொழி சினிமா ரசிகர்களுக்காக போட்டிதான்.
இந்தப் ஹேஸ்டேக் போட்டி வழக்கமான போட்டியாக இல்லாமல், இரு மொழி சினிமா நடிகர்களும், நீங்கள் எங்கள் மொழிப் படத்தைத் தான் ரீமேக் செய்கிறீர்கள் என்று மாறி மாறி சில பிரபல நடிகர்களின் புகைப்படத்தை  எடுத்து அதைப் பதிவிட்டு ஹேஸ்டேக் செய்து டிரெண்டாக்கி ரசிகர்கள் மோதி வருகின்றனர்.
 
இது ஆரோக்கியமான செயலாக இல்லை எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
இன்றைய பைத்தியம்,#UnrivalledTamilActors vs #TeluguRealHeroes சவுத் இந்தியன் ஃபேன்ஸ்க்கு இடையேயான மோதல் போக்குகள்.
 
இதனால் இணையதளம்  வீணாகிறது! நம் நாட்டு இளைஞர்களின் இணையதள டேட்டா என்பது நம் நாட்டுக்கு மிகவும் தேவை என தெரிவித்துள்ளார்.