1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 நவம்பர் 2024 (10:16 IST)

வா வாத்தியார் படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் நீண்டகாலமாக நடந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

நீண்டகாலமாக இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று மாலை படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. போலீஸ் கெட்டப்பில் கார்த்தி காரில் இருந்து இறங்க, அவரை மேள தாளத்தோடு வரவேற்கிறது ஒரு கூட்டம். அவர்களோடு சேர்ந்து கார்த்தி அலட்டல் இல்லாத ஆட்டம் போட செம்ம vibe ஆன இசையைக் கொடுத்துள்ளார் சந்தோஷ் நாரயணன்.

இந்நிலையில் இப்போது ‘வா வாத்தியார் ‘ படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை திங்க் ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படம் ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.