1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 நவம்பர் 2024 (09:30 IST)

மலையாள சினிமாவேக் காத்திருக்கும் ‘மெகாஸ்டார் 429’ படத்தின் ஷூட்டிங் தொடக்கம்!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன் லால், மம்மூட்டி, பஹத் பாசில் மற்றும் மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள மல்டி ஸ்டாரர் படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தை மாலிக் புகழ் மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.

இந்த படத்தின் மூலம் மம்மூட்டி மற்றும் மோகன் லால் ஆகியோர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இணையவுள்ளனர். கடைசியாக 2008 ஆம் ஆண்டு 20-20 என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்துக்காக மம்மூட்டி 100 நாட்களும் மோகன்லால் 30 நாட்களும் தேதிகளை ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் இளவயது டி ஏஜிங் காட்சிகள் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் தொடங்கியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மம்மூட்டி, மோகன்லால் மற்றும் குஞ்சக்கா போபன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகிவருகிறது. இந்த படத்துக்குத் தற்காலிகமாக ‘மெகாஸ்டார் 429’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.