ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 நவம்பர் 2024 (09:41 IST)

டிபன் பாக்ஸை கொடுத்து 10 வயது மாணவியை வன்கொடுமை செய்த ஆசிரியர்! - அரியலூரில் அதிர்ச்சி!

அரியலூரில் பள்ளியில் படித்து வந்த 5ம் வகுப்பு மாணவியை ஆசிரியரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அரியலூர் வடக்கு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் 10 வயது மாணவி ஒருவர் மீது அவர் தவறான கண்ணோட்டம் கொண்டிருந்ததாக தெரிகிறது.

 

கடந்த சில தினங்களுக்கு முன் மதிய உணவு இடைவேளையின்போது சிறுமியிடம் தனது டிபன் பாக்ஸை கொடுத்து ஆசிரியர் அறையில் வைக்க சொல்லியுள்ளார். சிறுமி சென்றபோது பின்னாலேயே சென்ற ராஜீவ்காந்தி, ஆசிரியர் அறையை பூட்டிக் கொண்டு சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

 

இதனால் சிறுமியும் இதை யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் சிறுமியின் நெஞ்சுப்பகுதியில் காயங்கள் இருப்பதை அவரது தாயார் கவனித்துள்ளார். இதுபற்றி சிறுமியிடம் விசாரித்தபோது சிறுமி நடந்த விஷயங்களை சொல்லியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதன்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்த போலீஸார் ராஜீவ்காந்தியை கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K