வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (07:02 IST)

கார்த்தி& நலன் குமாரசாமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஜப்பான் படத்தை முடித்த நடிகர் கார்த்தி அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.அந்த படத்தின் ஷூட்டிங் பாதியளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை வீடியோவை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படம் கமர்ஷியல் சினிமாக்களுக்கு ஒரு ட்ரிப்யூட் செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம், எம் ஜி ஆராக மாறிவிடும் பேண்டசி தன்மையை கொண்டதாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் திரையரங்க ரிலீஸுக்குப் பின்னரான ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.