ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (15:34 IST)

கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பல்- 7 பேர் மாயம்!

south korea ship
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதில் 7 பேர் மாயமானதாக தகவல் வெளியாகிறது.
 
தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று, ஜப்பானிய தீவின் ஔர்கே சென்றபோது எதிர்பாராத விதமாய் கடலில் மூழ்கியது.
 
கடலில் கப்பல் சாயத்தொடங்கியதும், அதிலிருந்த ஊழியர்கள் கடலில் குதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர், விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர்.
 
இதில், கடலில் தத்தளித்த 4 ஊழியர்கள் மீட்கப்பட்ட நிலையில், 7 பேரைக் காணவில்லை என கூறப்படுகிறது.
 
இக்கப்பலில் இந்தோனேஷியாவை சேந்த 8 பேரும், தென்கொரியாவை சேர்ந்த 2 பேரும் சீனாவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 ஊழியர்கள் பயணித்ததாகவும்,  கியோயங் சன் என்ற ரசாயனக் கப்பல் சாய்ந்துகொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ஜப்பான் கடலோர காவல்படை மீட்பில் இறகியதாக கூறப்படுகிறது. 
 
தற்போது மாயமான 7 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.