வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (15:02 IST)

ஜப்பான் படம் நல்லா வந்திருக்கணும்… ஆளாளுக்கு கரெக்‌ஷன் சொல்லி கெடுத்துட்டாங்க… நடிகர் பவா செல்லதுரை குற்றச்சாட்டு!

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதையடுத்து அவர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையடுத்து அவர் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன அந்த படம் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான தோல்வியைப் பெற்றது. ஜப்பான் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கார்த்தியின் நடிப்பையும், ராஜு முருகனின் திரைக்கதையையும் கழுவி ஊற்றினர்.

இந்த படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருந்தார் எழுத்தாளர் பவா செல்லதுரை. இப்போது படம் பற்றி பேசியுள்ள அவர் “ஜப்பான் படத்தில் நான் நடித்திருந்தேன். அது ஒரு சிறந்த நகைச்சுவை படமாக வந்திருக்க வேண்டும். ஆனால் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் சீரியஸ் காட்சிகள் போல ஆகிவிட்டன. ஹீரோ சொல்கிறார் என்று சில காட்சிகளை மாற்றுவது, தயாரிப்பாளர் சொல்கிறார் என்று சில காட்சிகளை மாற்றுவது தமிழ் சினிமாவில் பல தலையீடுகள் இருக்கின்றன.” என நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஆகியோர் மேல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.