1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (13:49 IST)

சூதுகவ்வும் 2 படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ள படக்குழு!

சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. டார்க் காமெடி வகையில் சூதுகவ்வும் தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னர் இந்த ஜானரில் வந்தது கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது 10 வருடங்கள் கழித்து சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் சி வி குமார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கருணாகாரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை யங் மங் சங் படத்தின் இயக்குனர் அர்ஜுன் இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூதுகவ்வும் 2 படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.