1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (15:09 IST)

வெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு !

கார்த்தி நடித்த தேவ் படத்தை அதிக விலைகொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர்.

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி, கடந்த வருடம் வெளியான குடும்ப ரசிகர்களை டார்கெட் செய்து வெளியான கடைக்குட்டி சிங்கம் மிகப் பெரும் வெற்றி பெற்று கடந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமானது. அதனையடுத்து அவர் நடிப்பில் உருவான அடுத்தப்படமான தேவ் விற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

அதனால் விநியோகஸ்தர்களும் இதுவரை கார்த்திப் படத்திற்கு இல்லாத விலையைக் கொடுத்து வாங்கி ரிலிஸ் செய்தனர். காதலர் தினத்தன்று வெளியான தேவ் முதல்நாளே ரசிகர்களை ஏமாற்றி விட்டதால் இரண்டாவது காட்சியில் இருந்தே ரசிகர்கள் வருகைக் குறைந்தது.

இதனையடுத்து இரண்டாவது மூன்றாவது நாட்களில் வசூல் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. விடுமுறை நாட்களான சனிக் கிழமையில் கூட சராசரி வருகையை விடக் குறைவாகவே கூட்டம் வருகிறது.  காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படத்திற்கு காதலர்களின் வருகைக் கூட எதிர்பார்த்த அளவில் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விநியோகஸ்தர்களுக்குப் பெரிய அளவில் நஷடமேற்படும் சூழல் உருவாகி உள்ளது.