வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:51 IST)

அதுக்கு செட்டாவாரா... கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணையும் விஷால்?

நடிகர்  விஷாலின், 'சண்டைக்கோழி 2' படம் சக்கை போடு போட்டதால் சென்ற வருட பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்தது. இத்துடன் ஆக்சன் மற்றும் திரில்லர் கதையாக வெளிவந்த 'இரும்புத்திரை' படமும் கடந்த ஆண்டு விஷாலுக்கு நல்ல வசூலை கொடுத்தது.


 
தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் 'அயோக்யா' படத்தில் விஷால் நடித்துள்ளார்.  இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்துடன் அயோக்யா குறித்து நல்ல எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவுகிறது.
 
இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் விஷால் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஷாலை பொறுத்தவரை அடிதடி, ஆக்சன் திரில்லருக்குத்தான் செட் ஆவார் என்ற அளவில் இப்போது வரை உள்ளது. அதேநேரம் கௌதம் மேனன் பொதுவாக காதல் மொழி கொஞ்சி படங்களை எடுப்பதில் வல்லவர். எனவே  விஷாலிடம்  நிச்சயமாக காதல், ரொமான்ஸ் கலந்த படத்தை எதிர்பார்க்கலாம்.