கர்ணன் படத்தின் ரிலீஸ் வேலைகள் ஆரம்பம்… இதுதான் ரிலீஸ் தேதி!

Last Updated: செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:52 IST)
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ரிலீஸ் வேலைகளை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தொடங்கியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. லாக்டவுனுக்கு முன்னதாகவே பெரும்பாலானக் காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில் லாக்டவுனுக்கு பின்னர் கிளைமேக்ஸ் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு படம் முடிக்கப்பட்டது.

இப்போது பின் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில்
கர்ணன் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளாராம் தாணு.இதில் மேலும் படிக்கவும் :