1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:25 IST)

இந்தியாவில் முதன்முறையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி? – ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி!

இந்தியாவில் முதன்முறையாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு, மாட்ர்னா உள்ளிட்ட 5 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ஆமதாபாத் ஜைடஸ் ஹெடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ் டி தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 12 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு சோதிக்கப்பட்டது இந்த ஜைகோவ் டி என்பதால், இதற்கு அனுமதி கிடைத்தால் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.