கர்ப்பகால அனுபவங்களை புத்தகமாக வெளியிட்ட கரீனா கபூர்… பெயரால் வந்த சர்ச்சை!
நடிகை கரீனா கபூர் தனது கர்ப்பகால அனுபவங்களை பிரக்னன்சி பைபிள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார்.
நடிகை கரீனா கபூருக்கும் சாயிப் அலிகானுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பின்னர் அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்து, இப்போது கரீனா கபூர் மீண்டும் நடிக்கவந்துவிட்டார். இந்நிலையில் தனது கர்ப்பகால அனுபவங்களை மற்ற பெண்களுக்கு உதவும் விதமாக பிரக்னன்ஸி பைபிள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார்.
இந்நிலையில் அந்த தலைப்புக்கு இப்போது சில கிருஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த பெயரை நீக்க வேண்டும் எனக் கூறிவருகின்றனர். ஆனால் அதை கரினா கபூர் மாற்ற மறுத்து வருகிறார்.