1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (16:49 IST)

ஹிப் ஹாப் ஆதி நடிக்கவேண்டிய படத்தில் ஒப்பந்தமான அதர்வா!

நடிகர் அதர்வா நடிப்பில் சற்குணம் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் வெற்றிப் படங்கள் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதில் குறிப்பிட்டு சொல்லும் படி அவர் நடித்த படம் என்றால் பரதேசி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்கள்தான். சண்டிவீரன் படத்தை பாலா தயாரிக்க இயக்குனர் சற்குணம் இயக்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்க உள்ளனராம். சண்டிவீரன் படமே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரிய வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று தொடங்கியுள்ளது.  இந்த படத்தில் அதர்வாவுடன் ராஜ்கிரண் மற்றும் ராதிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அதர்வா இல்லையாம். ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகி கடைசி நேரத்தில் அவர் வெளியேறியதால் அவருக்கு பதில் அதர்வா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.