செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 22 ஜனவரி 2019 (11:01 IST)

'கண்ணே கலைமானே' இசை வெளியீடு தேதி அறிவிப்பு

'கண்ணே கலைமானே' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


 
தர்மதுரை படத்தை அடுத்து இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் கண்ணே கலைமானே. உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.
 
படத்தின் முதல் பாடலான ‘எந்தன் கண்களை காணோம்’ என்ற சோகப்பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதேபோல் இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
 
இந்நிலையில் கண்ணே கலைமானே படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி 24ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்
 
“கண்ணே கலைமானே படம் விவசாயிகளின் பிரச்னைகள், நீட் தேர்வு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கிய கதை என ஏற்கனவே உதயநிதி கூறியுள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி கமலக்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் ஆர்கானிக் விவசாயியாக நடித்துள்ளார். தமன்னா, பாரதி என்ற கதாபாத்திரத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரியாக நடித்துள்ளார்.