செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (17:23 IST)

'எந்தன் கண்களை காணோம்' - வேற லெவல் மியூசிக்!

ஆண்டிபட்டி கனவா காத்து ஆள தூக்குதே என அனைவரையும் அசர அடித்தவர் சீனு ராமசாமி. அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்கள் கிராமத்து ஸ்டைலில் இருந்தது. அந்தப் படங்களின் பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது.  கதையும் பல ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மண் வாசனையோடு கிராமத்து மனிதர்களின் நேசத்தை கதையாக காட்டியிருப்பார் சீனுராமசாமி சீனுராமசாமி.   இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து 'கண்ணே கலைமானே' படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார்.

கண்ணே கலைமானே  படத்தின் முதல் சிங்கிள் டிராக் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.   'எந்தன் கண்களை காணோம்' என்று தொடங்கும் அந்த பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளதால் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.