ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (16:27 IST)

மீண்டும் தொடங்கிய தலைவி படப்பிடிப்பு… புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா!

தலைவி படத்தின் படப்பிடிப்பில் தான் இருக்கும் புகைப்படங்களை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கங்கனா ரனாவத். மேலும் ‘அனைவருக்கும் காலை வணக்கம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஏ எல் விஜய்யுடன் காட்சி பற்றிய ஆலோசனை. இந்த உலகத்தில் எவ்வளவோ அருமையான இடங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த இடம் படப்பிடிப்புத் தளம்தான்’ எனக் கூறியுள்ளார்.