வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (10:58 IST)

சசிகலா தயவுல அமைச்சர் பதவியா... கொதித்துப்போன ஜெயகுமார்!

சசிகலா தயவுல அமைச்சர் பதவியா... கொதித்துப்போன ஜெயகுமார்!
சசிகலா குறித்து கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டமாக பதில் அளித்தார் அமைச்சர் ஜெயகுமார்.
 
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் முதல்வர் வேட்பாளர் குறித்தும் சசிகலா குறித்தும் கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார்...
 
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக அதிமுகவில் எவ்வித சலசலப்பும் இல்லை. நாங்கள் யாரும் சசிகலாவின் தயவால் அமைச்சராகவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தான் அமைச்சர்கள் ஆனோம் என்று காட்டமாக பதிலளித்தார்.