1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified சனி, 27 மே 2023 (08:11 IST)

கோயிலுக்கு வரும் மேற்கத்திய ஆடையா… பாடம் எடுக்கும் கங்கனா ரனாவத்!

பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருகிறர கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கோயிலுக்கு வரும் இளம்பெண்கள் அரைகுறை ஆடைகளோடு வருவது பற்றி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

டிவிட்டரில் நிகி என்ற பெண் கோயிலுக்கு வரும் பெண்கள் நைட் கிளப்புக்கு செல்வது போல உடையணிந்து வருகிறார்கள் என்று சில புகைப்படங்களை இணைத்து ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டில் பதிலளித்துள்ள கங்கனா ரனாவத் “இதுபோன்ற மேற்கத்திய ஆடைகள் வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டவை. ஒரு முறை வாட்டிகனுக்கு நான் ஜீன்ஸ் டிஷர்ட் அணிந்து சென்ற போது என்னை அனுமதிக்கவில்லை. பின்னர் ஹோட்டலுக்கு சென்று ஆடைமாற்றியபின்னர்தான் அனுமதிக்கப்பட்டேன். இரவு உடைகளையே அணிந்து கோயிலுக்கு வரும் இவர்கள் சோம்பேறிகள். இவர்களுக்கு கடுமையான விதிகள் வகுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.