திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 20 மே 2023 (23:49 IST)

மும்பையில் பிரமாண்ட ஓட்டல் கட்டும் சல்மான் கான்

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் சல்மான்கான். இவர்   நடிப்பில், சமீபத்தில் வெளியான படம்  கிஸி கா பாய் கிஸி கி ஜான். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் சூப்பர் ஹிட்டான பதான் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தினார்.

இவர் தற்போது 'டைகர்' 3 வது பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில்,  பாலிவுட் சினிமா நடிகர்கள் பலரும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் சல்மான் கான் மும்பையில் ஓட்டல் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார்.

மும்பை கடற்கரை ஒட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மானுக்கு ஏற்கனவே வீடுகள் உள்ள நிலையில், இங்கு பிரமாண்ட ஓட்டல் ஒன்றை கட்டமுடிவெடுத்துள்ளார்.

இதில், தங்கும் அறைகள், உணவகம், நீச்சம் குளம் , ஜிம் உள்ளிட்ட பலதரப்பட்ட வசதிகள் இடம்பெறவுள்ளன.

இந்த ஓட்டல்  நடிகர் சல்மான் கானின் தாயார் பெயரில் அமையவுள்ளதாகவும் இதற்காக மும்பை மாநகராட்சியிடம் முறைப்படி அனுமதி பெற விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.