1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 20 மே 2024 (08:26 IST)

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

திரை உலகம் பொய்யானது மற்றும் போலியானது என்றும் அதனால் திரையுலகில் இருந்து விலகப் போகிறேன் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கங்கனா ரனாவத் ’திரை உலகம் பொய்யானது, அங்கு எல்லாம் போலியானது, பார்வையாளர்களை கவர்வதற்காக பொய்யான ஒரு உலகத்தை உருவாக்குகின்றனர், அதனால்தான் நான் நடிப்பு போரடித்ததால் தயாரிப்பு இயக்கம் என்று சென்றுவிட்டேன்

தற்போது நான் அரசியலுக்கு வந்து விட்டேன், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆகிவிட்டால் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva