செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (16:19 IST)

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ளது. இந்த படம் பற்றி பேசிய கங்கனா “படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்” எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் “இந்த படத்துக்கான நான் எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்து எடுத்துள்ளேன்.” எனக் கூறியிருந்தார். இந்த படம்  கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அதன் பின்னர் தேதி ஒத்திவைக்கப்பட்டு  ஜூன் 14 ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது அந்த தேதியிலும் படம் ரிலீஸாகாது என சொல்லப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் கங்கனா ரனாவத் அதன் காரணமாக படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தற்போது கவனிக்க முடியாத சூழலில் உள்ளாராம். அதனால் படத்தின் ரிலீஸ் இன்னும் தாமதமாகும் என சொல்லப்படுகிறது.