திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2020 (07:59 IST)

இரங்கல் தெரிவிப்பதற்காக 4 கிலோமீட்டர் நடந்தே சென்ற கவர்னர்: பரபரப்பு தகவல்

இரங்கல் தெரிவிப்பதற்காக 4 கிலோமீட்டர் நடந்தே சென்ற கவர்னர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டம் செய்யத் தொடங்கினார் 
 
இந்த நிலையில் தனது வருத்தத்தையும் பிரதமரின் இரங்கலையும் அந்தக் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஜம்மு கஷ்மிர் கவர்னர் மனோஜ் சின்ஹா என்பவர் அந்த கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் நடந்தே சென்றார். அந்த கிராமத்திற்கு செல்வதற்கு எந்த விதமான போக்குவரத்து வசதிகளும் இல்லை என்பதால் தனது பாதுகாவலர்களுடன் அவர் 4 கிமீ நடந்து சென்று குடும்பத்தினரை சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்தார்.
 
மேலும் பிரதமரின் இரங்கலையும் அவர் அந்த குடும்பத்தினரிடம் கூறினார். மேலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கவர்னர் மனோஜ் சின்கா அவர்களது குடும்பத்தினரிடம் உறுதி அளித்துள்ளார்
 
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கவர்னர் ஒருவர் நான்கு கிலோமீட்டர் நடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது