பிரதீப் &அஸ்வத் மாரிமுத்துவின் ‘டிராகன்’ படத்தில் இணையும் இரண்டு முன்னணி கதாநாயகிகள்!
தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் புரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில் படம் நவம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.
இப்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதுவரை பிரதீப் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படக்குழு படமாக்கி வந்தனர். இதற்கிடையில் படத்தில் மிஷ்கின் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வி ஜே சித்து ஒரு வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் கதாநாயகிகளாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மமிதா பைஜு ஆகிய இருவரும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் விரைவில் படக்குழுவுடன் படப்பிடிப்பில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது.