கண்டா வரச் சொல்லுங்க… வெவ்வேறு வடிவங்களில் இணையத்தில் பரவும் வீடியோக்கள்!

Last Modified ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (16:56 IST)

கர்ணன் திரைப்படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல் இப்போது வேறு வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டு வருகிறது.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த இந்த படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலும் அதன் வீடியோவும் இணையத்தில் வெளியிடப்பட்டது. மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக உருவாக்கப்பட்டு இருந்த பாடல் வரிகள் ரசிகர்களைக் கவர்ந்தன. இந்நிலையில் அந்த வரிகளுக்கு ஏற்பட்ட வீடியோவை பெரியார், கலைஞர், தோனி, விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் வீடியோக்களை எடிட் செய்து ரசிகர்கள் பல விதமாக வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :