1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:47 IST)

பிரியா ஆனந்த் - துருவின் கெமிஸ்ட்ரி சும்மா அள்ளுது... "ஆதித்ய வர்மா" வீடியோ பாடல்!

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக தமிழில் ஆதித்ய வர்மா கடந்த நவம்பர் 2019ம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்டது. இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அவரது நடிப்பு பெரும்பாலான மக்களால் பாராட்டப்பட்டது.   
 
துருவ்விற்கு ஜோடியாக பனிதா சந்து நடித்திருந்த இப்படத்தில்  நடிகை பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ரதன் இசையில் உருவாகியிருந்த இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வீடியோ பாடல்கள் ஒவ்வொன்றும் மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற "கனா" என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இதில் துருவ் மற்றும் பிரியா ஆனந்தின் கெமிஸ்ட்ரி அவ்வளவு அற்புதமாக இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர்.