செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (16:45 IST)

என் அப்பா சினிமாவை விட்டு வெளியேற அம்மா ஆசைப்பட்டார் – துருவ் சொன்ன சீக்ரெட் !

நடிகர் விக்ரம் சேது படத்திற்கு முன்னர் பட்ட கஷ்டங்களைப் பார்த்து அவரது சினிமாவை விட்டு விலக வேண்டுமென பிராத்தனை செய்ததாக துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் சினிமாவிற்கு அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகே சேது படத்தின் மூலம் அவருக்கு ஒரு பிரேக் கிடைத்தது. அதன் பின்னர் வரிசையாக ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார். இடைப்பட்ட காலத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் டப்பிங் கலைஞர், துண்டு துக்கடா வேடம் என கிடைத்த வேலைகளை செய்து கொண்டு இருந்தார்.

இந்த காலகட்டத்தில் அவர் படும் கஷ்டங்களைப் பார்த்த அவரது மனைவி ஷைலஜா, விக்ரம் சினிமாத்துறையை விட்டு விலகவேண்டும் என பிராத்தனை செய்தததாக விக்ரம்மின் மகன் துருவ் தெரிவித்துள்ளார். ஆனால் சேது படத்தின் வெற்றி மற்றும் அங்கிகாரம் அவரின் மனதை மாற்றியது எனக் கூறியுள்ளார்.