திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 25 நவம்பர் 2018 (15:14 IST)

எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு: வேற லெவலில் இருக்கும் கனா டீசர்

கனா படத்தில் டீசர் இன்று வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது.
 
பாடகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள "கனா" படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. 
 
இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். மேலும் இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
 
கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது. இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரில் சிவகார்த்திகேயனின் பஞ்ச் பயங்கரம்... நீங்களே பாருங்கள்...