செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 நவம்பர் 2018 (06:59 IST)

சிவகார்த்திகேயனின் 'கனா' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நெருங்கிய நண்பர் அருண்காமராஜ் இயக்கி வந்த 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடித்து, தயாரித்துள்ள சிவகார்த்திகேயன், இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதன்படி இந்த படத்தின் டிரைலர் நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

திபு நைனன் தாமஸ் இசையில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்