வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 நவம்பர் 2018 (14:00 IST)

சிவகார்த்திகேயனின் கனா ட்ரைலர் அறிவிப்பு !

முதன்முதலாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது.
 
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று படிப்படியாக முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.
 
தனது நண்பனான பாடகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள "கனா" படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. 
 
இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். மேலும் இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
 
கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தனது செல்ல மகள் ஆராதனாவுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த வெற்றியால் மக்களின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உண்டானது.
 
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். தற்போது இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது சோனி மியூசிக் சவுத் நிறுவனம்.