சிம்பு தான் என் பர்ஸ்ட் பிரெண்ட் - பிரபல நடிகரின் பதிவால் STR ரசிகர்கள் குஷி!
தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்கள் பெரும்பாலும் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாகநடிகர் சிம்புவிற்கு சினிமாவில் இருக்கும் அத்தனை துறையும் அத்துப்படி என்றே சொல்லலாம்.
மேலும் தனது ரசிகர்கள் அனைவரிடமும் அன்பாக பக்கத்துக்கு வீட்டு நண்பன் போல பழகுவார் சிம்பு. இதனாலே சிம்பு ரசிகன் என சொல்லிக்கொள்வதற்கே அவரது ரசிகர்கள் பெருமைப்படுவார்கள். மேலும் சிம்புவிற்கு மஹத், பிரேம்ஜி போன்ற ஏராளமான நெருங்கிய நண்பர்கள் சினிமா துறையில் உள்ளனர். அந்த வகையில் சிம்புவின் சினிமா பயணத்தில் மற்றொரு ஹீரோ நெருங்கிய நண்பராக இருப்பது தெரிவந்துள்ளது.
ஆம், தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் "என் முதல் படத்துக்கு பிறகு , சினிமா துறையில் சிம்பு தான் என் முதல் நண்பர். நாங்கள் இருவரும் மனதளவில் ஒருவருக்கொருவர் நல்ல மரியாதையுடன் இருக்கிறோம். அவர் மற்ற நடிகர்களை விட மிகவும் வெளிப்படையானவர். ராட்சசன் படத்தின் போது பல்வேறு விஷயங்களை என்னுடன் பகிர்ந்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது என த்ரோபேக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.