சூப்பர் ஸ்டார் மியூசிக்கை வெளியிடும் உலக நாயகன்! – ட்ரெண்டான #DarbarThiruvizha

rajnikamal
Prasanth Karthick| Last Modified புதன், 6 நவம்பர் 2019 (17:58 IST)
நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளான நாளை ‘தர்பார்’ படத்தின் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்பட உள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. நீண்ட வருடங்கள் கழித்தி ரஜினி போலீஸாக நடித்துள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் பேராவலுடன் காத்துள்ளனர்.

தர்பார் படத்தின் அனைத்து பணிகளும் முடிவு பெற்றுவிட்ட நிலையில் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை நாளை வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் நாணயங்களின் இரு பக்கம் போல திகழ்பவர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும்!

இந்நிலையில் நாளை கமல்ஹாசன் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் கமல்ஹாசனால் தர்பார் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கும் வெளியாக உள்ளது.

தர்பார் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு போஸ்டரை நடிகர் கமல்ஹாசனும், இந்தி போஸ்டரை நடிகர் சல்மான் கானும், மலையாள போஸ்டரை நடிகர் மோகன்லாலும் வெளியிட இருக்கிறார்கள். உலக நாயகன் பிறந்த தினத்தில் சூப்பர் ஸ்டார் போஸ்டர் மற்றும் மியூசிக் வெளியாவது இரு தரப்பு ரசிகர்களையும் கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்தியுள்ளது. இதை முன்னிட்டு ரசிகர்கள் கமல் பிறந்தநாளில் தர்பார் தீம் மியூசிக் ரிலீஸ்! – ட்ரெண்டான #DarbarThiruvizha என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :