திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (16:15 IST)

கெடு கொடுத்த கமல்; கெடுபிடியில் ஷங்கர்! – தொடருமா இந்தியன் 2 படபிடிப்பு?

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நின்ற நிலையில் டிசம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்க கமல்ஹாசன் அவகாசம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. பின்னர் கொரோனா வந்ததால் படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடங்கி போயின.

தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் கள்ம் காண்கிறார். தேர்தல் பணிகள் நிறைய இருப்பதால் படப்பிடிப்பு பணிகளை டிசம்பர் இறுதிக்குள் முடிக்குமாறு கமல்ஹாசன் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கொரோனா சூழல் இன்னும் சரியாகாத நிலையில் படப்பிடிப்பிக்கு குறைந்தது 500 பேராவது அவசியம் என்பதால் லைகா நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் படத்தை இயக்குவதில் சிக்கல் உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.