ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (19:37 IST)

முறுக்கு மீசை கெட்டப்பில் கமல்ஹாசன்: வைரலாகும் புகைப்படங்கள்

கமல்ஹாசன் தேவர் மகன் பட பாணியில் முறுக்கு மீசை கெட்டப்புடன் வளம் வந்த புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து பிஸியாகச் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது விஸ்வரூபம் திரைப்படம் விரைவில் திரைக்கு வெளிவரவுள்ளது. அதற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்- 2 படத்தில் நடிக்க போகிறார்.
 
இந்நிலையில், கமல் தற்போது முறுக்கு மீசை கெட்டப்புக்கு மாறியுள்ளார். இதனால் அவர் இந்தியன்-2 படத்திற்காக கெட்டபை மாற்றியுள்ளாரா? அல்லது தேவர்மகன்-2 எடுப்பதற்காக கெட்டபை மாற்றியுள்ளாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.