ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (12:01 IST)

ரஜினி கமல் இருவருக்கும் பிரச்சாரம் செய்வேன் - நடிகர் பிரபு

அரசியலில் ரஜினி, கமல் இருவரையும் சமமாக பார்க்கிறேன் என்றும் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் நடிகர் பிரபு கூறியுள்ளார்.

 
ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசன் இருவரும் அடுத்தடுத்து தங்களது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளனர். கமல்ஹாசன் கட்சி மற்றும் சின்னத்தை அறிவித்து பொதுக்கூட்டத்தை நடத்த தொடங்கிவிட்டார். 
 
ரஜினிகாந்த மக்கள் மன்றம் மட்டும் தற்போது செயல்பட்டு வருகிறது. இன்னும் முழு வீச்சில் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கவில்லை. சினிமா துறையில் உள்ள பலரும் இவர்களின் அரசியல் பயணத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் நடிகர் பிரபு, கமல், ரஜினி இருவரையும் அரசியலில் சமமாக பார்க்கிறேன் என்றும் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். ரஜினி பிரபு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.