கோடி கோடியாய் உண்டியல் பணம் வேணும், சாமி வேணாமா? எஸ்.வி.சேகர்
ராமராஜ்ய ரதயாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இன்று போராட்டம் நடத்தி கைதானார்கள் என்பது தெரிந்ததே. இந்த ரத யாத்திரை ஐந்து மாநிலங்கள் வழியே வந்துள்ளது என்றும், அங்கெல்லாம் ஏற்படாத பிரச்சனை தமிழகத்தில் மட்டும் எப்படி ஏற்படும் என்பதும் முதல்வர் பழனிச்சாமியின் பதிலாக இருந்தது
இந்த நிலையில் இதுகுறித்து ஸ்டாலின் கூறியபோது, 'மற்ற மாநிலங்களை பற்றி கவலையில்லை; இது பெரியார் மண்; எங்களுக்கு உணர்வு இருப்பதால் நாங்கள் எதிர்க்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்
ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்த மண்லதான் அரசு நிர்வஹிக்கும் 58 ஆயிரம் கோயில்கள் உள்ளது. உண்டியல் பணம், கோயில் சொத்து வேணும். ஆனா சாமி வேணாமாம். வெங்காயம்' என்று கூறியுள்ளார்.
மேலும் கமல்ஹாசனின் கருத்துக்கும் எஸ்.வி.சேகர் கேரள அரசை குறிப்பிட்டு பதிலளித்துள்ளார். அதற்கு அவர் கூறியதாவது: இதுக்குப்பேர்தான் மதசார்பற்ற அரசு. கேரளா முதலமைசர் கிட்ட இந்த கேள்வியை கேட்டிருக்கலாமே. இந்து மதமே இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் மத வெறி. இந்துக்கடவுளைக் கும்பிடறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்னு சொல்ற தைரியம் இருந்தா பாராட்டலாம்' என்று கூறியுள்ளார்.