வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 31 ஜனவரி 2024 (09:47 IST)

தக் லைஃப் பட ஷூட்டிங்குக்காக ரஷ்யா செல்லும் படக்குழு!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. சில நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்த பின்னர் இப்போது அடுத்த கட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவின் சைபீரியா பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.