1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2024 (10:13 IST)

இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது.. கமல்ஹாசன் X தளத்தில் பதிவு

நாடு முழுவதும் 75வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
 
 75வது குடியரசு தின விழா அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் டெல்லியில் மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கவர்னர் ஆர் என் ரவி ஆகியோர் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு  சாதனை செய்தவர்களுக்கு சிறப்பு விருதுகளை அளித்தார். 
 
இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் தனது சமூக வலைதளத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கூறி இருப்பதாவது:
 
மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் எனும் மகத்தான மக்களாட்சித் தத்துவத்தை உலகுக்கு அறிவிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்தியா, குடியரசுத் தன்மையின் 75ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது;
 
இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்"
 
Editedd by Mahendran