வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (14:16 IST)

கமல்-ஹெச்.வினோத் இணையவுள்ள #kamal233 படம் பற்றி புதிய தகவல்

கமல்ஹாசன் அடுத்து வினோத் இணையும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வினோத். இவர்  இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம்,   நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்கள்   நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து  இவர் கமலை வைத்து இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘’கமல்ஹாசன் மற்றும்  ஆர். மகேந்திரன் தயாரிப்பில்,  இயக்குனர் ஹெச்.வினோத்  எழுதி, இயக்கவுள்ள  ‘’கமல்233’’ படத்தில்  கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும்  இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 152 வது படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், இப்படத்தின் திரைக்கதை, கால்ஷூட் பிரச்சனை காரணமாக இப்படம் கைவிடப்பட்டதாக சமீபத்தில் இணையதளத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில், #kamal233 படம் நிச்சயம் வேறு ஒரு  நேரத்தில் படமாக உருவாகப்படும் என்ற தகவல் வெளியாகிறது.

மேலும், கமல்- ஹெச்.வினோத் இணையும் படத்தை ராஜ்கமல் இண்டர் நேசனல் தயாரிக்கப் போவதாகவும், இதற்காக வேலையை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.