திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 29 மே 2021 (08:44 IST)

பிக்பாஸ் சீசன் 5… கமலின் சம்பளம் இவ்வளவு ஏறுகிறதா?

பிக்பாஸ்  5 ல் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசன் தனது சம்பளத்தை உயர்த்தி  விட்டாராம்.

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் விரைவில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழில் பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்டது முதலே கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்நிலையில் இந்த சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த சீசனுக்காக சம்பளத்தை ஒரு நாளுக்கு 50 லட்சம் அவர் அதிகமாக்கி விட்டாராம். கடந்த சீசனில் வார இறுதி நாளில் கலந்துகொள்ள 3 கோடி ரூபாய் வாங்கிய கமல், இப்போது 3.5 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை கேட்டுள்ளாராம். மொத்தமாக இந்த சீசனில் அவர் 50 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெறலாம் என சொல்லப்படுகிறது.