புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (16:08 IST)

பிக்பாஸ் 5-க்கும் கமல் தான் அம்பையர் - சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழில் பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்டது முதலே கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 
 
4 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 5-வது சீசனும் கமல் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்காக கமல் ஹாசன் கடந்த மார்ச் மாதமே அட்வான்ஸ் தொகையை பெற்றுவிட்டதாக  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகி ஒருவர் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். 
 
இந்த 5 வது சீசனில் கமலின் சம்பளம் 50 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தத் தொகையை தேர்தலுக்கு முந்தைய கட்சி செலவுகளுக்குக் கமல்கொடுத்தாகவும் அவர் கூறினார். தேர்தலில் நின்ற கமல் தோல்வியை தழுவியதால் நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது பரவலாக உறுதியாகிவிட்டது.