செவ்வாய், 10 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:18 IST)

தக் லைஃப் படத்தின் ரிலீஸில் கமல்ஹாசன் வைத்த கண்டீஷன்… இந்தியன் 2 தோல்வி எதிரொலியா?

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.  அடுத்த கட்டமாக முக்கியக் காட்சிகளுக்காக கோவாவுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்தாலும் அடுத்த ஆண்டுதான் இந்த படம் ரிலீஸ் ஆகுமாம். இந்த படத்தை இந்தியன் 2 போல அவசர அவசரமாக முடித்து ரிலீஸ் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம் கமல்ஹாசன். தக் லைஃப் படத்தை நிதானமாக முடித்து பொறுமையாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். ரிலீஸுக்கு ஒரு மாதம் முன்பே சென்சார் எல்லாம் செய்யப்பட்டு விட வேண்டும் என படக்குழுவினருக்கு அன்புக் கட்டளை வைத்துள்ளாராம்.